×

வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் செய்யாத கிரண்பேடி! – புதுவை அமைச்சர் தாக்கு

புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், அவரால் ஒன்றும் நடக்கவில்லை என்று புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். புதுவையில் நிருபர்களுக்கு மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி அளித்தார். அப்போது அவர், “கிரண்பேடி புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் எந்த ஒரு சாதனையையும் கிரண் பேடி செய்யவில்லை. மக்களுக்கு இலவச அரிசி திட்டத்தை முடக்கினார். பொய்யை மட்டுமே
 

புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், அவரால் ஒன்றும் நடக்கவில்லை என்று புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.
புதுவையில் நிருபர்களுக்கு மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி அளித்தார். அப்போது அவர், “கிரண்பேடி புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் எந்த ஒரு சாதனையையும் கிரண் பேடி செய்யவில்லை.


மக்களுக்கு இலவச அரிசி திட்டத்தை முடக்கினார். பொய்யை மட்டுமே கூறி வருகிறார். மத்திய அமைச்சர்கள், பிரதமரை சந்தித்து புதுச்சேரிக்காக ஒரு பைசா கூட அவர் வாங்கிக் கொடுத்தது இல்லை. மக்களுக்குத் தொந்தரவாக இருக்கிறார்.
பொதுவாக அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளில் என்ன கூறப்பட்டுள்ளது, என்ன நன்மை என்று பார்த்துக் கையெழுத்திடுவார்கள். ஆனால், கிரண் பேடியிடம் பழிவாங்கும் போக்கு மட்டுமே உள்ளது. இதனால், தன்னிடம் வரும் கோப்புகளை எல்லாம் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது மட்டுமே அவருடைய சாதனை.
மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தர முடியாத அவர், மக்கள் பணத்தில் செலவு மட்டுமே செய்து வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவுகளை குறைக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இப்படி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஒரு ரூபாயாவது குறைத்திருப்பாரா கிரண்பேடி?


மதுக்கடைகளைத் திறக்க ஒப்புதல் அளிக்க கோப்பு அனுப்பினால் அனுமதி தர மறுக்கிறார். புதுச்சேரியில் எதுவும் நடக்கக் கூடாது, புதுச்சேரி அரசுக்கு வருவாய் வரக்கூடாது என்ற எண்ணம்தான் கிரண்பேடிக்கு உள்ளது. கிரண்பேடியின் நடவடிக்கை எல்லாமே ஆப்பரேஷன் வெற்றி ஆனால், நோயாளி மரணம் என்ற வகையிலேயே உள்ளது” என்றார்.