×

“காங்கேயம் கால்நடை வளர்ப்போர்” சங்கச் செயலாளர் கார்த்திகேய சேனாபதி திமுகவில் இணைந்தார்!

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி திமுகவில் இணைந்தார். காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் – காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் செயலாளருமானவர் கார்த்திகேய சேனாபதி. இவர் தமிழக காளையினங்களை அழிவில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வேளாண் பல்கலைகழக நிர்வாக குழுவின் கெளரவ உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் காங்கேயம்
 

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி திமுகவில் இணைந்தார்.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் – காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் செயலாளருமானவர் கார்த்திகேய சேனாபதி. இவர் தமிழக காளையினங்களை அழிவில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வேளாண் பல்கலைகழக நிர்வாக குழுவின் கெளரவ உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கச் செயலாளர் கார்த்திகேய சேனாபதி திமுகவின் தன்னை இணைத்து கொண்டுள்ளார். கடந்த மாதங்களாகவே த கார்த்திகேய சிவசேனாபதி தி.மு.க-வில் ஆக்டிவ்வாக வலம் வந்த இவர் உதயநிதியுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் கார்த்திகேய சேனாபதிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.