×

எடியூரப்பாவின் மகனையும் டெலிட் செய்த டெல்லி மேலிடம்… 27 அமைச்சர்கள் லிஸ்டில் இடமில்லை!

எடியூரப்பாவை பதவியில் ஏற்றி அழகு பார்ப்பதும், எதிர்பார்க்காத ட்விஸ்டாக அரியணையை விட்டு இறக்கிவிடும் வேலையை படுஜோராக பாஜக தலைமை செய்து வந்திருக்கிறது. 2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வரலாறு இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு முறை முதலமைச்சராகியும் ஒருமுறை கூட ஐந்தாண்டுகள் பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்ததில்லை. 75 வயதைத் தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படும். ஆனாலும் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை டெல்லி மேலிடம் கொடுத்தது.
 

எடியூரப்பாவை பதவியில் ஏற்றி அழகு பார்ப்பதும், எதிர்பார்க்காத ட்விஸ்டாக அரியணையை விட்டு இறக்கிவிடும் வேலையை படுஜோராக பாஜக தலைமை செய்து வந்திருக்கிறது. 2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வரலாறு இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு முறை முதலமைச்சராகியும் ஒருமுறை கூட ஐந்தாண்டுகள் பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்ததில்லை. 75 வயதைத் தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.

ஆனாலும் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை டெல்லி மேலிடம் கொடுத்தது. ஆனால் அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் பதவி விலக வேண்டும் என்று கையெழுத்திடாத ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படியே பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற ஜூலை 27ஆம் தேதி ராஜினாமா செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது வெளிப்படையான காரணமாகக் கூறப்பட்டாலும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியில் அவரது மகன் விஜயேந்திராவின் தலையீடு இருந்ததே மிக முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. பாஜக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க பிளான் போட்டு வெற்றிக்கரமாக தூக்கிவிட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே முதலமைச்சராக சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மையின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை பெரும்பாலான அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் வரவேற்றனர்.

பசவராஜ் பொம்மை அமைச்சரவைக்கான பட்டியல் தயாரிப்பது தொடா்பாக டெல்லியில் முக்கிய தலைவா்களுடன் இரு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அமைச்சரவையில் சாதி, மாவட்ட வாரியாக முக்கியத்துவம் அளித்து அமைச்சர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்களுக்கும் அறிமுக இளைஞர்களுக்கும் பதவி கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் எடியூரப்பாவின் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று சொல்லப்பட்டது.

இச்சூழலில் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. அமைச்சரவையில் லிங்காயத்துகள் 8 பேர், ஒக்கலிகர்கள் 7 பேர், ஓபிசி 7 பேர், எஸ்.சி. 3 பேர் எஸ்.டி. பிரிவினர், ரெட்டி சமுதாயத்தில் ஒருவர், பெண் ஒருவர் என மொத்தம் 27 பேர் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பட்டியலில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. அதேபோல துணை முதலமைச்சர் பதவியும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.