×

பரபரப்பாகும் அரசியல் களம்! திமுக பொதுச்செயலாளராகிறார் கனிமொழி?

 

திமுக பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்கு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன் வயதுமூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது ஆஸ்பத்திரியில் அனுமதியாகி, சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார்.இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமைச்சர் துரைமுருகன் வீட்டில் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆஸ்பத்தியில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அமைச்சர் துரைமுருகனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், பொதுச்செயலாளர் பதவியினை கூடுதல் பொறுப்பாக டி.ஆர். பாலு அல்லது கனிமொழிக்கு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்.2ஆம் தேதியோடு நிறைவுபெறுவது குறிப்பிடதக்கது. ஆகவே கட்சியின் பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்கு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.