×

ஸ்டாலின், உதயநிதியை நேரில் சென்று வாழ்த்திய கமல்!

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிபெறுகிறது. ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராகிறார். உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து இடங்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெற்றிபெறாமல் போனார். அதற்குப் பிறகு மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ட்வீட் செய்திருந்தார். மேலும் ஸ்டாலினுக்கும்
 

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிபெறுகிறது. ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராகிறார். உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து இடங்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெற்றிபெறாமல் போனார். அதற்குப் பிறகு மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ட்வீட் செய்திருந்தார். மேலும் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் மே 7ஆம் தேதி ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அரசியல் களத்தில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டாலும் ஜனநாயகப் பண்புடன் கமல் வாழ்த்தியது வரவேற்பைப் பெற்றுள்ளது.