×

விரைவில் எனது முகவரி கோவை தெற்குக்கு மாறும் – கமல்ஹாசன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே உடன் கூட்டணி அமைத்து களம் காணுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அங்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசனுக்கு இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது. தனது கட்சி வேட்பாளர்களை பல்லக்கில் தூக்குவதற்காக உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் சொந்த செலவில் ஹெலிகாப்டரில், பம்பரமாக சுழன்றுக்
 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே உடன் கூட்டணி அமைத்து களம் காணுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அங்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசனுக்கு இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

தனது கட்சி வேட்பாளர்களை பல்லக்கில் தூக்குவதற்காக உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் சொந்த செலவில் ஹெலிகாப்டரில், பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். எந்த தொகுதிக்கு சென்றாலும் இரவு நேரத்தில் கோவை தெற்கிற்கு வந்து விடுகிறார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் வேட்பாளரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தனது இறுதி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இப்போது அரசியலுக்கு வந்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்தது. அதையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று அரசியலுக்கு வந்தேன். மக்களுக்காக தான் எனது வாழ்க்கை என்று முடிவெடுத்துள்ளேன். சம்பாதித்த பணத்தை எல்லாம் கட்சிக்காக செலவு செய்திருக்கிறேன். கூடுதலாக புதிய படங்கள் நடித்து அந்தப் பணத்தையும் கட்சிக்காக செலவு செய்வேன். அரசியல் பயணம் தொடரும். விரைவில் எனது முகவரி கோவை தெற்குக்கு மாறும் என்றார்.