×

ரெண்டே பஞ்ச் தான்… கருணாநிதி, ஜெயலலிதா க்ளோஸ் – ‘அரசியல்’ நாயகன் அதிரடி!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணாநகரில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், “மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சம்பாதிக்கும் எண்ணத்தில் அரசியலுக்கு வரவில்லை. 50 ஆண்டுகாலமாக சிதைந்து கிடக்கும் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு நாங்கள் கடமையாற்ற அனுமதி அளிக்க வேண்டும். ஏப்ரல் 6ஆம் தேதி அதற்கான விதையை தூவுங்கள். எங்கள் ஆட்சியில் வரவு, செலவு கணக்குகளை முறையாக, வெளிப்படையாக காட்டி விடுவோம். அதனை நீங்களே
 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணாநகரில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், “மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சம்பாதிக்கும் எண்ணத்தில் அரசியலுக்கு வரவில்லை. 50 ஆண்டுகாலமாக சிதைந்து கிடக்கும் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு நாங்கள் கடமையாற்ற அனுமதி அளிக்க வேண்டும். ஏப்ரல் 6ஆம் தேதி அதற்கான விதையை தூவுங்கள். எங்கள் ஆட்சியில் வரவு, செலவு கணக்குகளை முறையாக, வெளிப்படையாக காட்டி விடுவோம்.

அதனை நீங்களே ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம். கணக்கு கேட்பதற்கு இன்னொரு எம்ஜிஆர் வரவேண்டியது இல்லை. (கருணாநிதியிடம் கணக்கு கேட்ட பிரச்சினைக்குப் பின்பே அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார்). நீங்கள் ஒவ்வொருவரும் புரட்சித் தலைவராக மாறி கணக்கு கேட்கலாம். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தேவையான அளவுக்கு ஊதியத்தை எடுத்துக்கொண்டு மீதியை மக்களுக்கே கொடுத்து விடுவார்கள். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு (ஜெயலலிதாவின் வருமானம் 1 ரூபாய் என்று சொல்லப்பட்டது குறித்து சாடல் பேச்சு) கோடிக்கணக்கில் சுருட்டியது போன்று எங்கள் வேட்பாளர்கள் செய்ய மாட்டார்கள். இனி அது போன்று நடக்காது” என்றார்.