×

“பிரச்சின வந்தா ஊர விட்டு ஓடுன கமல் ஒரு மனுசனா” – ‘அது வேற வாய்’ சரத்குமார்!

அதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவிலிருந்து விலகிய பாரிவேந்தரின் ஐகேகேவுடன் சரத்குமார் கைகோத்தார். அதன்பின் திடீரென்று சசிகலாவைச் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்தார். அவரைச் சந்திந்து வெளியே வந்த உடனே பணம் வாங்கி ஓட்டு போடாதீர்கள் என மக்களின் கால்களில் விழப் போவதாக அறிவித்தார். அப்போதே கமலுடன் அவர் கூட்டணி வைப்பது உறுதியானது. அதுவரையில் ஊழல் குறித்து மூச்சு கூட விடாத சரத்குமார் சட்டென்று இவ்வாறு கூறினார். பேசுவது கமலா என்று நினைக்க வைத்துவிட்டார். இச்சூழலில்
 

அதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவிலிருந்து விலகிய பாரிவேந்தரின் ஐகேகேவுடன் சரத்குமார் கைகோத்தார். அதன்பின் திடீரென்று சசிகலாவைச் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்தார். அவரைச் சந்திந்து வெளியே வந்த உடனே பணம் வாங்கி ஓட்டு போடாதீர்கள் என மக்களின் கால்களில் விழப் போவதாக அறிவித்தார். அப்போதே கமலுடன் அவர் கூட்டணி வைப்பது உறுதியானது. அதுவரையில் ஊழல் குறித்து மூச்சு கூட விடாத சரத்குமார் சட்டென்று இவ்வாறு கூறினார். பேசுவது கமலா என்று நினைக்க வைத்துவிட்டார்.

இச்சூழலில் நேற்று தூத்துக்குடியில் பொதுக்குழுவைக் கூட்டிய அவர், அங்கே கமல்ஹாசனை கூட்டணியின் முதல் வேட்பாளராக அறிவித்தார். கமல் முதல்வராவார் என அவர் கூட கனவு கண்டிருக்க மாட்டார். ஆனால் சரத்குமார் கமலை முதல்வராகவும் தன்னை இரண்டாம் காமராஜராகவும் புகழ்ந்து பேச ஆரம்பித்துவிட்டார். இந்திரா காந்தியையும் லால் பகதூர் சாஸ்திரியையும் பிரதமராக வைத்தது போல் கமலை தான் முதல்வராக்குவேன் என சூளுரைத்துள்ளார். கட். அப்படியே ரீவைண்ட் போனால் கமலை கடித்து குதறியிருக்கிறார் சரத்குமார். அது வேற வாய் என்ற வடிவேலு காமெடி பாணியில் கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.

2015ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்ற சமயம் அது. அப்போது நாசர் தலைமையில் ஒரு அணியும், சரத்குமார் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. இதில் கமல் நாசர் அணிக்கு சப்போர்ட் செய்திருக்கிறார். அப்போது தான் கமலை சராமரியாக விமர்சித்திருக்கிறார் சரத்குமார். கமலின் குருநாதர் கே. பாலச்சந்தரின் மறைவுக்குக் அவர் கலந்துகொள்ளாததைச் சுட்டிக்காட்டும் சரத்குமார், ஏன் நாசரைத் தலைவராக முன்மொழிந்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார். அப்படியே கமலின் ‘வெளிநாடு’ விவாகரத்தின் பக்கம் பேச்சை திருப்பினார்.

கமல் போல மெமிக்ரி செய்துகொண்டே கமலை வறுத்தெடுக்கிறார். அதாவது அமெரிக்கா சென்று தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மிரட்டினார் என்று கமல் பேசுவது போல பேசிக் காட்டுகிறார். சந்தடி சாக்கில் பிரச்சினை வந்தால் ஊரை விட்டு ஓடுபவர் ஒரு மனுஷனா என்றும் கேட்டுவிட்டார். பிரச்சினை வந்தால் அதைச் சந்தித்து சாதனை படைப்பவன் தான் மனிதன் என்று சுட்டிக்காட்டும் அவர், கமல் போல ஒப்பாரி வைப்பவர்கள் மனிதர்கள் அல்ல என்றும் கூறியிருக்கிறார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை என்ற கூற்றை சரத்குமார் நிரூபித்திருக்கிறார்.