×

மத்திய பிரதேசத்தில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் நோயாளி மரணம்.. பா.ஜ.க. அரசை சாடிய கமல் நாத்..

அசோக் நகர் மாவட்டத்தை சேர்ந்த ஆரத்தி ராஜக் என்ற பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் சுனில் தக்காட்டை கடந்த புதன்கிழமையன்று மாலை 6 மணி அளவில் குணா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். டாக்டரை பார்க்க பதிவு சீட்டு வாங்க சென்ற போது கவுண்டரில் இருந்த பணியாளர் பணம் கேட்டுள்ளார். ஆனால் ஆரத்தியிடம் பணம் இல்லாததால் அன்று இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயதுடன் குழந்தையுடன் காத்திருந்தார். மறுநாள்
 

அசோக் நகர் மாவட்டத்தை சேர்ந்த ஆரத்தி ராஜக் என்ற பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் சுனில் தக்காட்டை கடந்த புதன்கிழமையன்று மாலை 6 மணி அளவில் குணா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். டாக்டரை பார்க்க பதிவு சீட்டு வாங்க சென்ற போது கவுண்டரில் இருந்த பணியாளர் பணம் கேட்டுள்ளார். ஆனால் ஆரத்தியிடம் பணம் இல்லாததால் அன்று இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயதுடன் குழந்தையுடன் காத்திருந்தார். மறுநாள் காலையில் 8 மணி அளவில் ஆரத்தியின் கணவர் சிகிச்சை அளிக்காததால் இறந்து விட்டார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குணா மாவட்ட மருத்துவமனையில் நோயாளி சிகிச்சை பெறாமல் இறந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச பா.ஜ.க. அரசை காங்கிரஸ் தலைவர் கமல் நாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், நீங்க எம்.எல்.ஏ.க்களை வாங்க தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுறீங்க, மறுபுறம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில் அசோக்நகரை சேர்ந்த பெண் தனது இரண்டரை வயது குழந்தையுடன் தனது கணவருக்கு சிகிச்சை அளிக்கும்படி கோரி ஒரு நாள் முழுவதும் காத்திருந்து உள்ளார்.

அந்த பெண்ணிடம் ரூ.5 இல்லாததால் நோயாளி பதிவு சீ்ட்டு வழங்கப்படவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அந்த பெண்ணின் கண்கள் முன்னால் கணவர் இறந்தார். இவை சிவ்ராஜ் அரசாங்கத்தின்கீழ் உள்ள மாநிலத்தின் சுகாதார சேவைகள், மாநிலத்தின் நிலைமை? என பதிவு செய்து இருந்தார். குணா மாவட்ட கலெக்டர் குமார் புருஷோத்தம் கூறுகையில், அரசு உத்தரவுப்படி மாவட்ட மருத்துவமனையில் நோயாளி பதிவு சீட்டு இலவசமாக வழங்க வேண்டும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்தால் அவருக்கு சிகிச்சை உறுதி செய்வது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்களின் பொறுப்பு. நோயாளி சிகிச்சை அளிக்காமல் இறந்தது தொடர்பாக மருத்துவமனையின் சிவில் சர்ஜன் எஸ்.கே. ஸ்ரீவஸ்தவாவிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.