×

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு பணம்… இலவச தடுப்பூசி கூட பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதி.. கமல்நாத்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட முதியவர்களை பணம் செலுத்த மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. ஆக, இலவச தடுப்பூசி என்பது கூட பா.ஜ.க. அரசின் பொய்யான வாக்குறுதி என்று கமல் நாத் குற்றம் சாட்டினார். நம் நாட்டில் தற்போது 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது. இன்று (மார்ச் 1-ம் தேதி) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா
 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட முதியவர்களை பணம் செலுத்த மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. ஆக, இலவச தடுப்பூசி என்பது கூட பா.ஜ.க. அரசின் பொய்யான வாக்குறுதி என்று கமல் நாத் குற்றம் சாட்டினார்.

நம் நாட்டில் தற்போது 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது. இன்று (மார்ச் 1-ம் தேதி) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது.

கமல் நாத்

இதில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அதேசமயம் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி கொரோனா தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொள்ளலாம். கோவிட்-19 தடுப்பூசி இலவசம் என்று கூறிவிட்டு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டால் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் இது தொடர்பாக கூறியதாவது:

பா.ஜ.க.

சில மாதங்களுக்கு முன்பு தேர்தல்கள் நடந்து கொண்டு இருந்தபோது மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கூட வராத நேரத்தில், பா.ஜ.க.வின் பெரிய தலைவர்கள், இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறினர். முதியவர்கள் மற்றும் இணைநோய்கள் உள்ளவர்கள் உள்பட சாமானிய மனிதர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு (தனியார் மருத்துவமனைகளில்) ரூ.500 செலுத்த வேண்டியது இருக்கும் என்பதை இன்று அறிந்து ஆச்சரியப்படுகிறேன். மேலும், இன்னும் பொது ஜனங்கள் எண்ணிக்கை வரவில்லை? இந்த தடுப்பூசியும் கூட ஒரு ஜூம்லா (பொய்யான வாக்குறுதி). இவ்வாறு அவர் தெரிவித்தார்.