×

நமது விஞ்ஞானிகள் அப்படி சொல்கிறார்கள்.. ஆனால் பா.ஜ.க. ஆலோசகர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.. கமல் நாத்

நம் நாட்டில் பரவும் கொரோனா வைரஸை நமது விஞ்ஞானிகள் இந்திய உருமாற்றமடைந்த வைரஸ் என்று சொல்கிறார்கள் ஆனால் பா.ஜ.க. ஆலோசகர்கள் மட்டும் ஏற்கவில்லை என கமல்நாத் தெரிவித்தார். இந்தியாவில் உருமாற்றமடைந்த பி.1.6.17 வைரஸ் (கொரோனா) தீவிரமாக பரவி வருகிறது. ஆனால் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இந்திய வைரஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படி அழைப்பது இந்தியாவின் புகழை களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே சமூக வலைதளங்களில் இந்த வார்த்தை பயன்படுத்துவது மிகவும் தவறானது. எனவே உங்களது தளங்களிலிருந்து
 

நம் நாட்டில் பரவும் கொரோனா வைரஸை நமது விஞ்ஞானிகள் இந்திய உருமாற்றமடைந்த வைரஸ் என்று சொல்கிறார்கள் ஆனால் பா.ஜ.க. ஆலோசகர்கள் மட்டும் ஏற்கவில்லை என கமல்நாத் தெரிவித்தார்.

இந்தியாவில் உருமாற்றமடைந்த பி.1.6.17 வைரஸ் (கொரோனா) தீவிரமாக பரவி வருகிறது. ஆனால் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இந்திய வைரஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படி அழைப்பது இந்தியாவின் புகழை களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே சமூக வலைதளங்களில் இந்த வார்த்தை பயன்படுத்துவது மிகவும் தவறானது. எனவே உங்களது தளங்களிலிருந்து இதனை நீக்க வேண்டும் என்று சமூகவலைத்தளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

வைரஸ்

மத்திய பிரதேச எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல் நாத் கூறியதாவது: கோவிட்-19 தொற்றுநோயின் 2வது அலையின்போது மாநிலத்தில் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளனர். இது சீன கொரோனாவில் தொடங்கியது. தற்போது அது இந்திய உருமாற்றமடைந்த கொரோனா. இந்திய உருமாற்றமடைந்த வைரஸ் பற்றி பிரதமரும், குடியரசு தலைவரும் பயப்படுகின்றனர். சிங்கப்பூர் போன்ற நாடுகள் நம்மை தடை செய்து உள்ளன.

பா.ஜ.க.

அங்கு கல்லூரியில் படிக்க மாணவர் ஒருவருக்கு கிடைத்த அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வருவதால் இந்திய உருமாற்றமடைந்த வைரசுடன் வரக்கூடும் என்று அவரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். நமது விஞ்ஞானிகள் இதை இந்திய உருமாற்றமடைந்த வைரஸ் என்று சொல்கிறார்கள். பா.ஜ.க. ஆலோசகர்கள் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.