×

 ’20 லட்சம் பேர் வருமானம் இழந்து தவிக்கின்றனர்’ அரசு உதவ கமல்ஹாசன் வேண்டுகோள்

கொரோனா கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவில் எண்ணற்ற பாதிப்புகளைக் கொடுத்துவருகிறது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இன்றுவரை கண்டறிய நிலையில் அதன் பாதிப்புகள் அதிகரித்தே வருகின்றன. கொரோனா நோய்த் தொற்றால் மூன்று வகையான பாதிப்புகளை நாடும் நாட்டு மக்களும் சந்தித்து வருகிறார்கள். முதலாவது நேரடியாக நோய்த் தொற்றலுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவது ஒருவகையினர். நாட்டைப் பொறுத்தவரை பெருமளவில் பொருளாதார பின்னடைவை எதிர்கொள்கிறது. மூன்றாம் வகை, ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியிருக்கிறது. அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப
 

கொரோனா கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவில் எண்ணற்ற பாதிப்புகளைக் கொடுத்துவருகிறது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இன்றுவரை கண்டறிய நிலையில் அதன் பாதிப்புகள் அதிகரித்தே வருகின்றன.

கொரோனா நோய்த் தொற்றால் மூன்று வகையான பாதிப்புகளை நாடும் நாட்டு மக்களும் சந்தித்து வருகிறார்கள். முதலாவது நேரடியாக நோய்த் தொற்றலுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவது ஒருவகையினர். நாட்டைப் பொறுத்தவரை பெருமளவில் பொருளாதார பின்னடைவை எதிர்கொள்கிறது. மூன்றாம் வகை, ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியிருக்கிறது. அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாத சூழலே இப்போது வரை இருக்கிறது.

குறிப்பாக, மக்களைச் சந்தித்து வியாபாரம் செய்பவர்களுக்கும் ஆட்டோ, வேன், டாக்ஸி யில் மக்களை அழைத்துச் செல்பவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை அரசு விதித்துவருவதால் அவர்கள் போதிய வருமானம் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான நிவாரணம் ஏதும் முழுமையாகக் கிடைக்காமல் அல்லல் படுகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வருமானம் இழந்து தவிக்கும் 20 லட்சம் பேருக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ’புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு,அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்’ பதிவிட்டுள்ளார்.