×

சாமியார்கள் உள்பட ஒவ்வொரு குடிமகனும் பேசும் போது தகுந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.. பா.ஜ.க. 
 

 

சாமியார் காளிசரண் மகாராஸ் கைது குறித்து கூறுகையில், சாமியார்கள் உள்பட ஒவ்வொரு குடிமகனும் தகுந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வின் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்தார்.

பிரபல சாமியாரான காளிசரண் மகாராஜ் அண்மையில், மகாத்மா காந்தியை கொன்றதற்காக நாதுராம் கோட்சேவை நான் வணங்குகிறேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சாமியார் காளிசரண் மகாரஜ் கைது செய்யப்பட்டது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியா  கூறியதாவது: சாமியார்கள் உள்பட ஒவ்வொரு குடிமகனும் தகுந்த வார்த்தைககளை பயன்படுத்த வேண்டும். மத தலைவர்களிடம் சற்று தாராள மனப்பான்மை இருக்க வேண்டும்.

2001 நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, 2016ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உமர் காலித் உள்பட பல மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நாடு துண்டு துண்டாக இருக்கும் போன்ற தேசவிரோத முழக்கங்களை எழுப்பினர். தேசவிரோத முழக்கங்களை எழுப்பியதற்காக உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து,  ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் இடதுசாரி தலைவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்து சென்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர், அவர்களின் முதுகில் தட்டி கொடுத்தனர்.  யாராவது எதிர்த்து பேசினால் இந்தியா மற்றும் இந்தியாவை பிரிப்பது பற்றி பேசுகிறீர்கள். அப்படியானால், உணர்வுகளை வெளிப்படுத்த ஒருவருக்கு (காளிசரண் மகாராஜ்) பேச்சு சுதந்திரம் ஏன் ஒதுக்கப்படவில்லை?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.