×

ராமதாஸும், அன்புமணியும் சேர்ந்து என் தந்தையை கொன்றனர்- காடுவெட்டி குரு மகள்

முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் மறைவிற்கு பின் அவரின் குடும்பத்திற்கும், பாமக கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. டாக்டர் ராமதாஸ் தரப்பு தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக காடுவெட்டி குருவின் குடும்பம் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றன. இதனால் அவர்கள் தங்களது ஆதரவை பாமகவுக்கு அளிக்காமல், திமுகவிற்கு கொடுத்துவருகின்றன. இது தேர்தலில் பாமகவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் பாமகவை எதிர்த்து காடுவெட்டி குருவின் குடும்பம் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம்
 

முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் மறைவிற்கு பின் அவரின் குடும்பத்திற்கும், பாமக கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. டாக்டர் ராமதாஸ் தரப்பு தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக காடுவெட்டி குருவின் குடும்பம் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றன. இதனால் அவர்கள் தங்களது ஆதரவை பாமகவுக்கு அளிக்காமல், திமுகவிற்கு கொடுத்துவருகின்றன. இது தேர்தலில் பாமகவுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் பாமகவை எதிர்த்து காடுவெட்டி குருவின் குடும்பம் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னகரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் இன்பசேகரனை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையும் அவரது கணவர் மனோஜும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய விருதாம்பிகை, “ராமதாஸும், அன்புமணியும் சேர்ந்து என் தந்தையை மருத்துவ கொலை செய்தனர். அவரை கொன்றுவிட்டு, வன்னியர் சங்க அறக்கட்டளையை அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டனர். அதுமட்டுமின்றி தந்தையிடம் இருந்த வாகனங்களையும் அபகரித்துக்கொண்டனர். அவர்களையே நம்பியிருந்த தங்களுக்கே இந்த நிலைமை என்றால், அவர்களை நம்பி ஓட்டுப்போடும் மக்களுக்கு என்ன நிலைமை என்பதை நினைத்துப்பாருங்கள், மக்களை ஏமாற்ற நினைப்பார்கள். அவர்களை நம்பிப்போனால் வன்னியர் இனத்துக்கே அழிவுதான்” என கடுமையாக விமர்சித்தார்.

ட்