×

“காமராஜர், அண்ணாவுக்கு அநீதி… வீண் வம்பை விலைக்கு வாங்கும் எடப்பாடி”

பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என 1979ஆம் ஆண்டு பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர். தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்தச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை இணையதளத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கொந்தளித்தனர். மேலும் சாலையிலுள்ள பலகையில் Grand Western Trunk
 

பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என 1979ஆம் ஆண்டு பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர். தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்தச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை இணையதளத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கொந்தளித்தனர். மேலும் சாலையிலுள்ள பலகையில் Grand Western Trunk Road என்ற எழுத்துருவை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கறுப்பு மை கொண்டு அழித்தனர். தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெடுஞ்சாலைத் துறையின் இணையதளத்தில் சென்னை அண்ணாசாலை – காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம். நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ என்றும், சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு’ என்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடு’ என்பது ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண்ணாவுக்கும், காமசராசருக்கும் செய்துள்ளனர்! விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை. விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு அதிமுக அரசு ஏனோ தூண்டுகிறது! வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்!

அரசே இப்படி போராட்டங்களைத் தூண்டலாமா? அண்ணா பெயரில் கட்சி – ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘மூலப் புருஷர்கள்’ யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப்பட்டன? தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன, பார்த்தீர்களா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.