×

மோடி - அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி: கே. பாலகிருஷ்ணன்

 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மோடி - அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி விழுந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

விழுப்புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பேட்டி அளித்தார். அப்போது, பேசிய அவர், “கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றத. அதில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அடிப்படையில், வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலில், மத்திய அளவில் பாஜக படுதோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற 16ஆம் தேதி தலித், பழங்குடி மக்கள் உரிமை மீட்புப் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அதில், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுவாக, சட்டத்தை மீறுபவர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய வேண்டும். அதில், தீட்சிதர்களுக்கு விதிவிலக்கு கிடையாது. குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கின்ற எவரும் ஆளுநராக இருக்க முடியாது. குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கின்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தவறினால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்.

ஆடியோ விவகாரம் தொடர்பாக, அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை. அரசினுடைய அனுபவத்தின் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேரடியாக பதவிக்கு வருவதுதான் வாரிசு அரசியல். ஆனால், கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து, பதவிக்கு வருவதை வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது. சாதாரணமாக நடைபெறும் சில சம்பவங்களை வைத்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.