×

“லீக்கான கே.டி.ராகவன் ஆபாச வீடியோ”: டிஜிபியிடம் எம்.பி ஜோதிமணி புகார்!

பாஜக கே.டி ராகவனின் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகாரளித்துள்ளார். தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இன்று காலை இணையதளத்தில் வீடியோ ஒன்று லீக்கானது. அதில், கே.டி ராகவன் பூஜை அறையில் வீடியோ காலில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை
 

பாஜக கே.டி ராகவனின் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகாரளித்துள்ளார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இன்று காலை இணையதளத்தில் வீடியோ ஒன்று லீக்கானது. அதில், கே.டி ராகவன் பூஜை அறையில் வீடியோ காலில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தன்னை கலங்க படுத்துவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் சட்டப்படி இதனை சந்திப்பேன் என்றும் கே.டி ராகவன் தெரிவித்தார். மேலும், தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

கே.டி ராகவன் மட்டுமல்லாது பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, பாஜக பெண் உறுப்பினர்களுக்கு ஆண் நிர்வாகிகள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக உறுப்பினர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜகவின் கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். அவர் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினருக்கு எதிராக புகார்கள் எழுந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளார்.