×

ஜெயலலிதா மீது ஆசிட் வீசப் போவதாகவும், வீடு புகுந்து தாக்கப்போவதாகவும்.. டிடிவி தினகரன் உருக்கம்

சசிகலாவின் உறவினர் இளவரசியின் சகோதரர் G.K.அண்ணாதுரை(60), சென்னையில் நேற்று முன் தினம் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணாதுரை, அதிகாலையில் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த அண்ணாதுரை, ஜெயலலிதா கொள்கைப் பரப்புச் செயலாளராக பதவி வகித்தபோது, அவரது மெய்காப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார். கோட்டூர் ஒன்றியப் பெருந்தலைவராக பதவி வகித்த G.K. அண்ணாதுரை, தற்போது கோட்டூர் தெற்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
 

சசிகலாவின் உறவினர் இளவரசியின் சகோதரர் G.K.அண்ணாதுரை(60), சென்னையில் நேற்று முன் தினம் காலமானார். உடல்நலக்‍குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த அண்ணாதுரை, அதிகாலையில் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானுக்‍கு எடுத்துச் செல்லப்பட்டது. உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த அண்ணாதுரை, ஜெயலலிதா கொள்கைப் பரப்புச் செயலாளராக பதவி வகித்தபோது, அவரது மெய்காப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார். கோட்டூர் ஒன்றியப் பெருந்தலைவராக பதவி வகித்த G.K. அண்ணாதுரை, தற்போது கோட்டூர் தெற்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

இதுகுறித்து அமமுக டிடிவி தினகரன் இன்று, ‘’அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஒன்றிய கழக செயலாளரும், நண்பரும், உறவினரும், நம் இயக்கத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவருமான மறைந்த G.K.அண்ணாத்துரை அவர்களின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அன்னாரது மறைவு நம்முடைய இயக்கத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’அந்தளவுக்கு கொள்கை பிடிப்போடு நம்மோடு பயணித்தவர். இன்று, நேற்றல்ல; புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு இதயதெய்வம் அம்மாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, அம்மா அவர்களுக்கு மெய்க்காவலராக வந்த எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் அண்ணாத்துரை. அம்மா அவர்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும், வீடு புகுந்து தாக்கப்போவதாகவும் அப்போது விடுக்கப்பட்ட மிரட்டல்களை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு புரட்சித்தலைவியைக் காத்து நின்ற பட்டாளத்தின் முன்னணி வீரர் அவர்.’’ என்று குறிப்பிட்டுள்ள தினகரன்,

’’அன்றைக்குத் தொடங்கிய பயணத்தில் எதிர்பார்ப்புகள் இன்றி இறுதி மூச்சு வரை இயக்கப்பணி ஆற்றியவர். லட்சியப் போராட்டம் நடத்தும் ஓர் இயக்கத்தின் தொண்டர் எப்படி செயல்பட வேண்டும் என்று நடந்து காட்டி முன்னுதாரணமாக திகழ்ந்த அன்னாரது மறைவு என் நெஞ்சத்தைக் கலக்கமுற செய்தது. வாழையடி வாழையான நம் இயக்கத்தின் பக்கங்களில் அண்ணாத்துரையின் பெயர் என்றைக்கும் நிலைத்திருக்கும்’’என குறிப்பிட்டுள்ளார் உருக்கமுடன்.