×

பாஜக கூட்டணியிலிருந்து விலகி சென்றது ஏன்? - ஜெயக்குமார்

 

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் பாஜக உடனான கூட்டணி  குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். ”அதிமுக பாஜக கூட்டணி சுமுகமாவே நடைபெற்றது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழலில், எங்களை பொறுத்தவரை கட்சி நலன் பாதிக்காத வகையில் மட்டுமே முடிவெடுக்க முடியும் இடங்கள் பங்கீடு காரணமாக தற்போது கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது அவர்களின் முடிவு.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே பாஜக தனித்து போட்டியிடுகிறது, ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் சட்டமன்றம், நாடாளுமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவர்களோடு கூட்டணி இருந்தது, தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து சென்று உள்ளது,  எனவே எதிர்காலத்தில் கூட்டணி உள்ளதா இல்லையா என்பது குறித்து கட்சி தலைமை தெரிவிக்கும். மேலும், கூட்டணி தொடர்கிறது என கூறுவது அண்ணாமலை கருத்து.

மேலும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். சிங்கம் சிங்கிலாக தான் வரும், அதிமுக சிங்கம். ஆகையால் மகத்தான வெற்றி அடையும்” எனக் கூறினார்.