×

அமமுகவினர் வலையில் அதிமுகவினர் சிக்க மாட்டார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து சென்னை, தியாகராய நகர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தினகரன் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போதைய அரசியல் நிலவரம், அமைச்சர்களின் நிலை குறித்து இருவரும் அலோசித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக வெற்றிப்பெற்று அதிமுகவை கைப்பற்றும் எனவும், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் அவரை நிச்சயம் வரவேற்பேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை
 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து சென்னை, தியாகராய நகர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தினகரன் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போதைய அரசியல் நிலவரம், அமைச்சர்களின் நிலை குறித்து இருவரும் அலோசித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக வெற்றிப்பெற்று அதிமுகவை கைப்பற்றும் எனவும், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் அவரை நிச்சயம் வரவேற்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை அடையாறில் அதிமுக அரசு சார்பில் மினி கிளினிக் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றஞ்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை. அவருடைய குற்றச்சாட்டில் உண்மையில்லை. நீதிமன்றங்கள் சென்றால் கூட இந்த வழக்குகள் நிற்காது.
அதிமுக, ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு எதிராக கட்சி ஆரம்பித்தவர்கள் டிடிவி தினகரன், எந்தவகையிலாவது அதிமுகவிலிருந்து யாராவது வருவார்களா என காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு தொண்டன் கூட அந்த பக்கம் திரும்பமாட்டான். அமமுகவினர் வீசும் வலையில் அதிமுகவினர் சிக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.