×

“மும்முனை மின்சாரம் முதல்வரின் ஏமாற்று வார்த்தை” : ஜவாஹிருல்லா

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு ஏமாற்று வார்த்தைகளாக மாறி உள்ளன என்று தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே கடந்த மாதம் 12 ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் பம்பு செட்டுக்கு
 

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு ஏமாற்று வார்த்தைகளாக மாறி உள்ளன என்று தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே கடந்த மாதம் 12 ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மும்முனை மின்சாரம் தேர்தல் வரை மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு ஏமாற்று வார்த்தைகளாக மாறி உள்ளன.தேர்தல் வரை வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் அதன்பிறகு நிறுத்தப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. குறுவை சாகுபடிக்கு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.