×

கர்நாடக துணை சபாநாயகர் மரணம் அரசியல் படுகொலை… காங்கிரஸை மறைமுகமாக குற்றம் சாட்டிய குமாரசாமி..

கர்நாடகாவில் சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா மரணம் சதிசெய்யப்பட்ட அரசியல் படுகொலை என்று மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 15ம் தேதியன்று கர்நாடக மேலவை சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது. அந்த கூட்டத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தாக்கல் செய்ய முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸை சேர்ந்த சபாநாயகர் தனது இருக்கையில் அமர மறுத்து விட்டார். இதனையடுத்து துணை சபாநாயகரான தர்மே கவுடா சபாநாயகர் இருக்கையில்
 

கர்நாடகாவில் சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா மரணம் சதிசெய்யப்பட்ட அரசியல் படுகொலை என்று மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 15ம் தேதியன்று கர்நாடக மேலவை சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது. அந்த கூட்டத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தாக்கல் செய்ய முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸை சேர்ந்த சபாநாயகர் தனது இருக்கையில் அமர மறுத்து விட்டார். இதனையடுத்து துணை சபாநாயகரான தர்மே கவுடா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள் தர்மே கவுடாவை கையை பிடித்து இழுத்து சபாநாயகர் இருக்கையிலிருந்து அகற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் நேற்று காலையில் சிக்மகளூரு அருகேயுள்ள கடூரில் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக தர்மே கவுடா மீட்கப்பட்டார்.

தர்மே கவுடா

தர்மே கவுடாவின் மரணம் கர்நாடக அரசியலில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி இது தொடர்பாக கூறுகையில், சட்டமன்றத்தில் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களில் தர்மே கவுடா இறந்ததால் நான் திகைத்து போனேன். இது அரசியல் ரீதியாக சதி செய்யப்பட்ட கொலை. கவுடாவை இழுத்து நகர்த்தி இழுத்து சென்றவர்கள் தங்கள் மனசாட்சியை கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் செய்தது சரியா தவறா?

காங்கிரஸ்

தர்மே கவுடாவின் தற்கொலை இன்றைய மாசுபட்ட, கொள்கை ரீதியான மற்றம் சுயநல அரசியலுக்கான தியாகமாகும். தலைவர் பதவிக்காக மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் மதச்சார்பின்மை சோதிக்கப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் தர்மே கவுடாவின் இதயம் பலியாகி உள்ளது. அதை பரிசோதித்தவர்களுக்கு இப்போது பதில் கிடைக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆக, தர்மே கவுடாவின் தற்கொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று குமாரசாமி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார் என்று தெரிகிறது.