×

ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து! – அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்கிறார்

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து என்றும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வந்த அமைச்சர் செல்லூர் செல்வராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நலம் பற்றிக் கேட்டபோது, “சட்டமன்றத்தில் எங்களுடைய ஆட்சியும் கட்சியும் அதிகமாக ஜெ.அன்பழகன் விமர்சித்து இருந்தாலும் அவருக்கு உடல்நலம் குன்றியிருக்கும் இந்த சமயத்தில் நாங்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம். தி.மு.க
 

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து என்றும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வந்த அமைச்சர் செல்லூர் செல்வராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நலம் பற்றிக் கேட்டபோது, “சட்டமன்றத்தில் எங்களுடைய ஆட்சியும் கட்சியும் அதிகமாக ஜெ.அன்பழகன் விமர்சித்து இருந்தாலும் அவருக்கு உடல்நலம் குன்றியிருக்கும் இந்த சமயத்தில் நாங்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம். தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து. அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். திராவிட இயக்கம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்” என்றார்.