×

திமுக, மதிமுக, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரி சோதனை!

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒருபக்கம் பரப்புரை, வேட்பு மனுதாக்கல் என அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கும் சூழலில், மறுபுறம் வருமான வரி துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை
 

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒருபக்கம் பரப்புரை, வேட்பு மனுதாக்கல் என அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கும் சூழலில், மறுபுறம் வருமான வரி துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது. தொழிலதிபர் சந்திரசேகரனின் சொந்த சகோதரரும் மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜன், அவரது நண்பர் திமுக நகர செயலாளர் தனசேகர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இதேபோல், தாராபுரத்தில் திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினர் உட்பட தமிழகம் முழுவதும் 20 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தியது. சோதனையில் தனிநபர்கள் குழுக்களாக இணைந்து பல கோடி ரூபாய் மோசடி நடத்தியது அம்பலமாகியுள்ளது. கடந்த 11ஆம் தேதி முதல் நடந்த சோதனையில் கணக்கில் வராத 400 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது