×

‘’திமுகவை குறிப்பிடாதது கூட பரவாயில்லை..குற்றவாளி திருமாவளவனை மன்னிக்க முடியாது’’

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு ஊதிய கேட்டு நடத்திய பேரணியில் வெடித்த போலீசாரின் துப்பாக்கி சூட்டினாலும் தடியடியினாலும் தாமிரபரணி நதியில் குதித்து மூழ்கி 17 பேர் 23.7.1999 அன்று உயிரிழந்தனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவினை கொடுக்க முடியாதபடி அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டதால்தான், தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் இறங்கி அந்த கரை வழியாக ஆட்சியரை சந்திக்க முயன்போதுதான் போலீசார் துப்பாக்கி சூடு , தடியடி நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையில்
 

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு ஊதிய கேட்டு நடத்திய பேரணியில் வெடித்த போலீசாரின் துப்பாக்கி சூட்டினாலும் தடியடியினாலும் தாமிரபரணி நதியில் குதித்து மூழ்கி 17 பேர் 23.7.1999 அன்று உயிரிழந்தனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவினை கொடுக்க முடியாதபடி அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டதால்தான், தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் இறங்கி அந்த கரை வழியாக ஆட்சியரை சந்திக்க முயன்போதுதான் போலீசார் துப்பாக்கி சூடு , தடியடி நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு கற்களால் தாக்கியதால் தான் காவலர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார்.

அந்த சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு அந்த சம்பவ தினம் என்பதால், #மாஞ்சோலை: அரசப் பயங்கரவாத வன்கொடுமைக்குப் பலியான சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 17 போராளிகளுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த #வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இன்று எமது கட்சியின் முன்னணி தோழர்கள் தாமிரபரணி நதியில் மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,ஜூலை23: மாஞ்சோலை போராளிகள் வீரவணக்கநாள். #மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்மீது காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கியதில் 17பேர் பலியாயினர். தாமிரபரணி ஜீவநதி அன்று பிணங்களைச் சுமந்த சவநதியானது. 22ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அரசப்பயங்கர வாதம் ஒழிப்போம் என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டித்து நடைபெற்ற பேரணியில், கருணாநிதி நடத்திய அரச பயங்கரவாதத்திற்கு, இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் பதில் பெற்றே தீருவோம் என்று தான் ஆண்டு தவறாமல் விவாதிக்கிறோம் என்றும், உழைத்த கூலி கேட்டதற்கு அடித்துக் கொன்று ஆற்றில் போடுவது தான் திராவிட இயக்கத்தின் சமூக நீதியா? என்றும் பதிவிட்டு வரும் நிலையில் புதிய தமிழகம் ஷியாம் கிருஷ்ணசாமி, கருணாநிதி ஆட்சியில் ஜனநாயகத்தை நம்பி கூடிய அப்பாவி தொழிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்கபட்ட நாள் ஜூலை 23 -1999. என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பதால் கருணாநிதியின் பெயரை குறிப்பிடாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

’’திமுகவை குறிப்பிடாதது கூட பரவாயில்லை.. ஆனால் 1999யில் மாஞ்சோலை பிரச்சனை உச்சக்கட்டத்தில்- சாதி மத பேதமில்லாமல் தொழிலாளர்கள் அணி திரண்ட போது 150 பறையர் குடும்பங்களை பிரித்து நேர் எதிராக செயல்பட வைத்த குற்றவாளி திருமாவளவன் என்பதை வரலாறு, மன்னிக்க முடியாதது’’என்கிறார்.