×

தகுதி இல்லாதவர்களை நீக்க வேண்டியது என் கடமை – கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்ததிலிருந்தே அதன் முக்கிய புள்ளியாக இருந்தவர் கமீலா நாசர். மக்கள் நீதி மய்யம் முதன்முறையாக களம் கண்ட, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கமீலா நாசரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்தார். கமீலா நாசர்
 

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்ததிலிருந்தே அதன் முக்கிய புள்ளியாக இருந்தவர் கமீலா நாசர். மக்கள் நீதி மய்யம் முதன்முறையாக களம் கண்ட, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கமீலா நாசரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்தார். கமீலா நாசர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் இன்னும் இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், தகுதி இல்லாத தலைவர்களை நீக்க வேண்டியது முக்கியமான விஷயம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இணையவழி கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கட்சியில் தலைவர்களை தேடுகிறேன். அப்படி தகுதி இல்லாதவர்களை நீக்க வேண்டியது மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக எனது கடமை. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. கோட்டைக்குள் நடப்பது மட்டுமே ஆட்சி அல்ல என்று கூறினார்.