’’சேலம் பகுதிகளில் இரட்டை இலை தாமரையாக மாறிவிட்டது’’
பாஜகவிற்காக இஸ்லாமியர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியில் தூக்கி போடும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் அரசியல் விமர்சகர் சுந்தரவல்லி.
அதிமுகவிலிருந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து நிலோபர் கபில் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கட்சிக்கு எதிராக நடந்ததாக சொல்லி அன்வர் ராஜா நீக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து சுந்தரவல்லி, அதிமுக தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் இபிஎஸ்- ஓபிஎஸ் என்ற இரண்டு பாஜக அடிமைகளின் கையில் கட்சி சிக்கியிருப்பதுதான்.
அதிமுகவை ஒழித்துக் கட்டிவிட்டு தங்களது சுயலாப வாழ்வை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். பாஜகவுக்காக இஸ்லாமியர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களை தூக்கி வெளியில் போடும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே கட்சிக்கு உண்மையாக இருந்தவர் அன்வர்ராஜா. பிஜேபி யை குறை சொன்னால் அவர்கள் கட்சியில் இருந்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவிடம் இருந்து விடுபடவேண்டும் என்று சொன்னார் அன்வர்ராஜா. பாஜகவுடன் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று உண்மையை கூறிய அவர், அப்படிப்பட்டவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.
நிலோபர் கபிலை தூக்கிவிட்டார்கள். கேட்டால் ஊழல் என்கிறார்கள். ஊழலில் அடிபட்ட பலர் கட்சியில் இருக்கும் போது, அவரை மட்டும் தூக்குவதன் நோக்கம் என்ன? என்று கேட்கிறார் சுந்தரவல்லி. தமிழ்மகன் உசேன் அவர்களை தலைவராக அமர்ந்திருப்பது தற்காலிக ஏற்பாடுதான் என்று சொல்லும் சுந்தரவல்லி,
இப்போது பாஜக அதிமுக வின் தொண்டையை கடித்து ரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிறது. சேலம் பகுதிகளில் இரட்டை இலை தாமரையாக மாறிவிட்டது என பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டார்கள் என்கிறார்.