×

மீண்டும் தலைமைச்செயலகம் ஆகிறதா? ஜெ.,வால் அகற்றப்பட்ட கல்வெட்டு மீண்டும் பதிப்பு

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகம் வசதியாக இல்லை என்று சொல்லி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியால் கட்டப்பட்ட அந்த தலைமைச் செயலகம் வசதியாக இல்லை என்று சொல்லி அதை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றி விட்டு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகத்தை மாற்றினார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின்னர் திமுக ஆட்சி வந்திருப்பதால் ஓமந்தூரார் தோட்டத்தில்
 

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகம் வசதியாக இல்லை என்று சொல்லி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியால் கட்டப்பட்ட அந்த தலைமைச் செயலகம் வசதியாக இல்லை என்று சொல்லி அதை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றி விட்டு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைச் செயலகத்தை மாற்றினார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின்னர் திமுக ஆட்சி வந்திருப்பதால் ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியால் கட்டப்பட்ட கட்டிடத்தில் மீண்டும் தலைமைச்செயலகம் இயங்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவால் அகற்றப்பட்ட கல்வெட்டு மீண்டும் பதிக்கப்பட்டிருக்கிறது.

புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் இயங்க வசதியாக இல்லை என்றும் நெருக்கடியாக இருக்கிறது என்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டிட பணிகள் 2010ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது.

தேர்தல் வருவதற்கு முன்பாக தனது ஆட்சியில் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக கட்டிட பணிகள் முடிவடையாமல் இருந்த நிலையிலும் கூட அவசர அவசரமாக சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியை வைத்து தற்காலிக செட் அமைத்து எல்லாம் திறப்பு விழா நடத்தப்பட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கிரிக்கெட் பிரபலம் தோனி உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த தலைமைச் செயலகத்திற்கு வந்து சுற்றிப் பார்த்தார்கள்.

2011 இல் அதிமுக ஆட்சியைப் பிடித்து விட்டததும், கருணாநிதி அமைத்த இந்த புதிய கட்டிடம் அரசு இயங்குவதற்கு வசதியாக இல்லை என்று சொல்லி மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே தலைமையகத்தை மாற்றினார் ஜெயலலிதா.

தலைமைச்செயலகத்தின் பாதி அலுவல்கள் புனித ஜார்ஜ் கோட்டையிலும், பாதி அலுவல்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட கட்டிடத்திலும் நடந்து வந்ததால் அலுவலர்கள், அதிகாரிகளில் நேர செலவும், கால விரயம் ஆகியவற்றை உணர்ந்து இந்த மாற்றத்தினை செய்ததாக ஜெயலலிதா அப்போது தெரிவித்திருந்தார்.

புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார். அந்த கட்டிடத்தில் இருந்த பிரதமர் மன்மோகன், சிங் சோனியா காந்தி, கருணாநிதி உள்ளிட்டவர்களின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டும் அகற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்தப் பன்னோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டு மீண்டும் அதே இடத்தில் தலைமைச்செயலகம் செயல்பட இருக்கிறது என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜெயலலிதா ஆட்சியில் அகற்றப்பட்ட கல்வெட்டு மீண்டும் பதிக்கப்பட்டிருப்பது அதை உறுதிப்படுத்துகிறது என்கிற தகவல் பரவுகிறது.