×

கொரோனாத் தொற்று குறையாத ஒரே நாடு இந்தியா… ராமதாஸ் எச்சரிக்கை

உலக அளவில் கொரோனாத் தொற்று குறையாத ஒரே நாடாக இந்தியா உள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் கொரோனாத் தொற்று வெளிப்பட்டது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கி இன்று உச்சத்தில் உள்ளது. உலக அளவில் ஒரு நாளைக்கு அதிக தொற்று நோயாளிகள் கண்டறியப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலக கொரோனா தொற்று நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக நாடுகள் எல்லாம் கொரோனாவைக் கட்டுப்படுத்த
 

உலக அளவில் கொரோனாத் தொற்று குறையாத ஒரே நாடாக இந்தியா உள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் கொரோனாத் தொற்று வெளிப்பட்டது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கி இன்று உச்சத்தில் உள்ளது. உலக அளவில் ஒரு

நாளைக்கு அதிக தொற்று நோயாளிகள் கண்டறியப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலக கொரோனா தொற்று நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.


உலக நாடுகள் எல்லாம் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கைக் கொண்டு வந்தன. கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு ஊரடங்கில் தளர்வை அளித்தன. ஆனால், இந்தியாவில் கொரோனா இல்லாத போது ஊரடங்கு வந்தது. கொரோனா தினம் தினம் புதிய உச்சத்தைத் தொடும் நிலையில் கட்டுப்பாடுகள் இல்லை. இதுவே தொற்று அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.


கொரோனா அதிகரிப்பு பற்றி அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கொரோனாவை வைத்து லாபம் பார்ப்பதாக அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.


இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கொரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில் 28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்து விட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை!


கொரோனா தொற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதைக் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்!” என்று கூறியுள்ளார்.