×

எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு- உயிருக்கு அச்சுறுத்தல் என உளவுத்துறை எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக உளவுத் துறையின் சார்பில்மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு நிகழ்ச்சிகளில், கூட்டங்களில் பங்கேற்கும் நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மத அடிப்படைவாதிகள், தமிழ்தேசியவாதிகள் ஆகியோரிடமிருந்து அவருக்கு அச்சுறுத்த
 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக உளவுத் துறையின் சார்பில்
மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு நிகழ்ச்சிகளில், கூட்டங்களில் பங்கேற்கும் நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத அடிப்படைவாதிகள், தமிழ்தேசியவாதிகள் ஆகியோரிடமிருந்து அவருக்கு அச்சுறுத்த உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இசட் பிளஸ் பாதுகாப்புக்கு இணையாக தமிழக காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அரசு நிகழ்ச்சிகளிலும்,அலுவல் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், இன்று அதிமுக செயற்குழு கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி உளவுத்துறை எச்சரிக்கைச் செய்துள்ளது.

இதையடுத்து, இன்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.