×

‘கமல் ஹாசன் கூட்டாளி வீட்டில் ரெய்டு’ சிக்கியது ரூ. 8 கோடி! ஊழல் பத்தி நீங்க பேசலாமா?

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.8கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் சந்திரசேகரன். திருப்பூரின் தொழிலதிபர்களில் முக்கியமானவரான அவரது வீடு மற்றும் அலுவலகம் ,உறவினர்களின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர் . திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா டெக்ஸ்ட்காட் பின்னலாடை நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் கணக்கில் வராத 8 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்
 

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.8கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் சந்திரசேகரன். திருப்பூரின் தொழிலதிபர்களில் முக்கியமானவரான அவரது வீடு மற்றும் அலுவலகம் ,உறவினர்களின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர் . திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா டெக்ஸ்ட்காட் பின்னலாடை நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் கணக்கில் வராத 8 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அனிதா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சந்திரசேகரன் மருத்துவ உபகரணங்களை தயார் செய்து வருகிறார். அதேபோல் கொரோனா கவச ஆடைகள் ,முகக் கவசங்கள் ஆகியவற்றை தமிழக அரசுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், மத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகள் வகித்து வரும் இவர் ராஜ்கமல் FRONTIERS PRIVATE LIMITED நிறுவனத்தில் கமலுடன் தொழில் கூட்டாளியாகவும் உள்ளார். 50 ஆண்டுகாலமாக ஊழலில் திளைத்திருக்கும் திராவிட கட்சிகளை வேரறுப்போம் என்று முழங்கி வரும் கமல் ஹாசனின் கட்சி நிர்வாகியும், கூட்டாளியுமான சந்திரகேரன் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.