×

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மக்கள் ஜனநாயக கட்சி கை விடாது….. இல்டிஜா முப்தி உறுதி..

ஜம்மு அண்டு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்பட காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மக்கள் ஜனநாயக கட்சி விட்டுக் கொடுக்காது. மக்களின் உரிமைக்காக போராடவில்லை என்றால் ஜம்மு அண்டு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் சட்டப்பூர்வதன்மை இழக்கும். காஷ்மீரில் கடந்த ஒரு வருடம்
 

ஜம்மு அண்டு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்பட காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மக்கள் ஜனநாயக கட்சி விட்டுக் கொடுக்காது. மக்களின் உரிமைக்காக போராடவில்லை என்றால் ஜம்மு அண்டு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் சட்டப்பூர்வதன்மை இழக்கும்.

காஷ்மீரில் கடந்த ஒரு வருடம் முதல் துணை ராணுவம் படையினர் அதிகரித்துள்ளனர், அதிக தடுப்புகள் உள்ளன. மக்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. மக்கள் நகைச்சுவையை சொன்னாலும் அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) போடப்படுகிறது. சட்டப்பிரிவு 370 மற்றும் சட்டப்பிரிவு 35ஏ நீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தற்போதைய அரசுக்கு எதிராக போராடவில்லை என்றால் முக்கிய கட்சிகள் தங்களது நம்பகத்தன்மை இழக்கும்.

பிரதமர் மோடியின் அயோத்தி பயணம் நடவடிக்கை பொருளாதார மந்தநிலை, உயரும் பணவீக்கம், வேலையின்மை போன்ற பிற சிக்கல்களை தவிர்ப்பதற்கான ஒரு திசைதிருப்பல் தந்திரமாகும். அமித் ஷாவுக்கு நல்வாழ்த்துக்கள். அவர் எங்களுக்கு தவறு செய்து இருந்தாலும் அவர் முழு குணமடைய நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் தனது தாய் மெகபூபா முப்தியை இன்னும் ஏன் காவலிலிருந்து விடுவிக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.