×

ரஜினி போன்ற நல்லவர்களிடம் நிச்சயம் ஆதரவு கேட்போம்- ஹெச். ராஜா

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதனிடையே ரஜினி கட்சி தொடங்குவதை பாஜக பெரிதும் எதிர்பார்த்திருந்தது, ஆனால் அவர் கட்சி தொடங்கவில்லை என்பதால் அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியை அறிவிக்கும் என்ற பேச்சு உள்ளது. இருப்பினும் ரஜினியின் ஆதரவை பாஜக நாடியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதனிடையே ரஜினி கட்சி தொடங்குவதை பாஜக பெரிதும் எதிர்பார்த்திருந்தது, ஆனால் அவர் கட்சி தொடங்கவில்லை என்பதால் அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியை அறிவிக்கும் என்ற பேச்சு உள்ளது. இருப்பினும் ரஜினியின் ஆதரவை பாஜக நாடியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் வரவே முடியாது என்ற எதார்த்த உண்மையை தான் அழகிரி கூறியுள்ளார். நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்லவர்களிடமும் பிஜேபி ஆதரவு கேட்கிறது. அதன் அடிப்படையில் நல்லவரும், செல்வாக்கு மிக்கவருமான ரஜினிகாந்திடமும் ஆதரவு கேட்க உள்ளோம். கமலஹாசனின் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகியான அருணாசலமே பாஜகவில் சேர்ந்துள்ளார். இன்னும் பலர் அக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர உள்ளனர். வேளாண் சட்டத்திற்கு எதிராக மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்”