×

 தீர்ப்பை எடப்பாடிக்கு சாதகமாவே எழுதுறாங்களே எப்படி? ஓபிஎஸ் ஆதரவாளர் எழுப்பும் சந்தேகம்

 

ஓபிஎஸ் அணியினரை ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கி இருக்கிறார்.  இதை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் அடுத்தடுத்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   இந்த சட்டப் போராட்டங்களில் ஆரம்ப கட்டத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அலை அடித்தாலும் கடைசி தீர்ப்பு என்னவோ எடப்பாடி அணியினருக்குத் தான் சாதகமாக அமைகிறது.  இது குறித்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.

எப்புடி
இப்புடி
எடப்பாடி
எடப்பாடி விரும்பும் தீர்ப்புகள் ஏறத்தாழ அவர் விரும்பும் நேரத்தில் அவர் விரும்பும் வடிவத்தில் வருகிறது...
ஆனால் எடப்பாடியை அச்சுறுத்தும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு  முதல்  ஊழல் முறைகேடுகள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் கோமா நிலையிலேயே அசைவற்று. கிடக்கிறததே
எப்புடி இப்படி..

#ஒரேகுஷ்டமப்பா
நீதி மன்றங்களில் எடப்பாடி எது கேட்டாலும்
கிடைக்குதே எப்படி..
அதுவும்
விசாரிக்கும்
போது
அது நொட்டை
இது நொட்டைன்னு
எடப்பாடி
தரப்பை
திட்டிப்புட்டு
கடைசியில
தீர்ப்பை
மட்டும்
அந்த
எடப்பாடி
உத்தமனுக்கு
சாதகமாவே
எழுதுறாங்களே
எப்படி...
கோர்ட்டுக்கு
போறதும்
பைத்தியக்கார
ஆஸ்பத்திரிக்கு
போறதும்
ஒரே மாதிரி
இருக்குல்ல..
என்ன நாஞ் சொல்றது..

அதிமுக  பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து  ஓபிஎஸ் ஆதரவாளார்களான  மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி குமரேஷ்பாபு  முன் விசாரணைக்கு வந்தது. முதலில் தனது வாதங்களை முன்வைத்த ஓபிஎஸ் தரப்பு, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிடத் தயார், வழக்கையும் வாபஸ் பெற தயார் என அறிவித்தது. 

தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார், அவர் எங்களை நீக்கியுள்ளார், நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும், 1977 முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், நிறைய கட்சி பணிகள் உள்ளது. எனவே பொதுச்செயலாளர் தேர்தல் அவசியம் என வாதிட்டது.  இதனை கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இவ்வாறு விவாதம் நடந்திருக்கிறது.