×

ஹித்ராஸ் சம்பவம்- உண்மையை ‘புதைத்த’ ஸ்டாலின்

திமுக தலைவராக இருந்த கருணாநிதி விஷயஞானம் மிக்கவர். உள்ளுர் அரசியல் தொடங்கி தேசிய, சர்வதேச அரசியல் வரை அவருக்கு அத்துப்படியாக இருந்தது. இதனால் கருணாநிதியின் அரசியல் எதிரிகள் அவரிடம் வாய்கொடுக்க அஞ்சினர். ஆனால் கருணாநிதியின் மகனும், தற்போதைய திமுக தலைவருமான ஸ்டாலின் இதற்கு நேரெதிரானவர். அரைகுறையாக விஷயங்களை அறிந்துவிட்டு பொது நிகழ்வுகளில் எக்குத்தப்பாகப் பேசுவது இவரது வாடிக்கையாக உள்ளது. இப்படி ஏற்கனவே பலமுறை பேசி, மீடியாக்களில் வெளியாகியிருந்தாலும் ஸ்டாலின் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.உ.பி மாநிலம் ஹித்ராஸில் தலித் இளம்பெண்
 

திமுக தலைவராக இருந்த கருணாநிதி விஷயஞானம் மிக்கவர். உள்ளுர் அரசியல் தொடங்கி தேசிய, சர்வதேச அரசியல் வரை அவருக்கு அத்துப்படியாக இருந்தது. இதனால் கருணாநிதியின் அரசியல் எதிரிகள் அவரிடம் வாய்கொடுக்க அஞ்சினர்.


ஆனால் கருணாநிதியின் மகனும், தற்போதைய திமுக தலைவருமான ஸ்டாலின் இதற்கு நேரெதிரானவர். அரைகுறையாக விஷயங்களை அறிந்துவிட்டு பொது நிகழ்வுகளில் எக்குத்தப்பாகப் பேசுவது இவரது வாடிக்கையாக உள்ளது. இப்படி ஏற்கனவே பலமுறை பேசி, மீடியாக்களில் வெளியாகியிருந்தாலும் ஸ்டாலின் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
உ.பி மாநிலம் ஹித்ராஸில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த பெண்ணின் உடலை, குடும்பத்தினருக்குக் கூட காட்டாமல் இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி பேசாத அரசியல் கட்சிகள் இல்லை ; எழுதாத பத்திரிகைகள் இல்லை.
ஆனால் ஸ்டாலினுக்கு இது தெரியவில்லை போலும்!


ஹித்ராஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசிய அவர், ஹித்ராஸில் குறிப்பிட்ட பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார். இதைக் கேட்டு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்களும் தலையிலடித்துக் கொண்டனர்.
‘’ நாடு முழுவதும் பற்றியெரிகிற ஒரு பிரச்சனை. ஆனால் அது பற்றி போதிய புரிதல் இல்லாமல் இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறாரே!. அடக்கம் என்பது சடலத்தை புதைப்பதுதான். ஆனால் அந்த பெண்ணின் சடலம் தகனம் அல்லவா செய்யப்பட்டது! காவலர்கள் சூழ்ந்திருக்க சடலம் எரியூட்டப்பட்ட காட்சி எல்லா மீடியாவிலும் வெளியாகி இருந்ததே. இந்த நிலையில் எரித்து அடக்கம் செய்ததாக உளறினால் எப்படி! சடலத்தை எரித்த பிறகு எப்படி அடக்கம் செய்ய முடியும்!அடக்கத்திற்கும், தகனத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஆளா இருக்கிறாரே’’ என்கிறார்கள் ஸ்பாட்டிலிருந்த பத்திரிகையாளர்கள்.