×

“ரஜினிக்கு அரசியலை விட உடல்நலனே முக்கியம்” : கமல் ஹாசன்

ரஜினியும் நானும் தொடர்ந்து அரசியல் குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், “அரசியல் குறித்து ரஜினியுடன் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அறிக்கையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஏற்கனவே எனக்கு தெரிந்ததுதான். ரஜினியின் உடல்நலம் முக்கியம் . அரசியல் கட்சி பற்றி அவர் தான் முடிவெடுக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம். எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களை
 

ரஜினியும் நானும் தொடர்ந்து அரசியல் குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், “அரசியல் குறித்து ரஜினியுடன் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அறிக்கையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஏற்கனவே எனக்கு தெரிந்ததுதான். ரஜினியின் உடல்நலம் முக்கியம் . அரசியல் கட்சி பற்றி அவர் தான் முடிவெடுக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம். எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களை அழைக்கிறேன்.

மூன்றாவது அணி உருவாகிவிட்டது என்று கூறினேன். எங்கள் கட்சியில் ஒரு வருடத்தில் 1 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் . இதுவே மக்கள் எங்களுக்கும் கொடுக்கும் சமிக்ஞை. வேலையின்மை தமிழகத்தை தாக்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. அதனால் வேலை வாங்கி தருவது தான் எங்களின் வேலை. சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது வேட்புமனு தாக்கலின் போது தெரியும்.நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல; பழிவாகும் அரசியலும் அல்ல; வழிகாட்டும் அரசியலை செய்யப்போகிறோம்” என்றார்.