×

உளவு பார்க்கும் விவகாரம்.. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இது நடக்குது.. எச்.டி. குமாரசாமி

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே போன் ஒட்டுகேட்டல் நடக்குது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, முன்னாள் முதல்வர்கள் எச்.டி.குமாரசாமி,சித்தராமையா ஆகியோரின் தனிப்பட்ட செயலாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பி மத்திய
 

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே போன் ஒட்டுகேட்டல் நடக்குது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, முன்னாள் முதல்வர்கள் எச்.டி.குமாரசாமி,சித்தராமையா ஆகியோரின் தனிப்பட்ட செயலாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பி மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், போன் ஒட்டுகேட்டல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடக்குது என்று எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் சாப்ட்வேர்

மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கூறியதாவது: பெகாசஸ் உளவு சம்பவம் புதிதல்ல, இது போன்ற உளவு மற்றும் தொலைபேசி ஒட்டுகேட்டல் சம்பவங்கள் 10-15 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தற்போதை நரேந்திர மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் பல அரசாங்கள் மற்றும் வருமான வரித்துறை கூட மக்களின் தொலைப்பேசிகளை ஒட்டு கேட்டன.

பிரதமர் மோடி

நான் முதல்வராக இருந்தபோது எனது தனிப்பட்ட செயலாளரின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பது குறித்து நான் கவலைப்பட்டேன். ஏனென்றால் நாட்டின் பாதுகாப்பு அல்லது கர்நாடக மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆகவே இந்த நேரத்தின் எனது பார்வையின்படி, இது போன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கோவிட்-19 தொற்றுநோயால் மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனது தனிப்பட்ட வேண்டுகோள் என்னவென்றால், அனைத்து தலைவர்களும் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தி சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.