×

எங்ககிட்ட பணம் இல்லை… அதனால் இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டோம்.. ஓப்பனாக சொன்ன தேவகவுடா

கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் நாங்க போட்டியிடமாட்டோம், எங்களிடம் பணம் இல்லாததே இதற்கு காரணம் என்று மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா வெளிப்படையாக தெரிவித்தார். கர்நாடகாவில் பெல்காவி மக்களவை தொகுதி, மாஸ்கி, சிந்தகி மற்றும் பசவ கல்யாண் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சி போட்டியிடாது
 

கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் நாங்க போட்டியிடமாட்டோம், எங்களிடம் பணம் இல்லாததே இதற்கு காரணம் என்று மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா வெளிப்படையாக தெரிவித்தார்.

கர்நாடகாவில் பெல்காவி மக்களவை தொகுதி, மாஸ்கி, சிந்தகி மற்றும் பசவ கல்யாண் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சி போட்டியிடாது என்று அந்த கட்சியின் தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம்

முன்னாள் பிரதமரான தேவகவுடா இது தொடர்பாக கூறியதாவது: பெல்காவி மக்களவை தொகுதி, மாஸ்கி, சிந்தகி மற்றும் பசவ கல்யாண் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதசார்ப்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தாது. தேர்தலுக்கு எங்களிடம் பணம் இல்லை. 2023ல் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது.

பா.ஜ.க.

கட்சியுடன் நான் முழுமையாக ஈடுபடுவேன். தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடு பிராந்திய கட்சியை (மதசார்ப்பற்ற ஜனதா தளம்) காப்பாற்றவும், கட்டியெழுப்பவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மதசார்ப்பற்ற ஜனதா தளம் அண்மையில் பா.ஜ.க. ஆதரவுடன் கர்நாடக மேலவை தலைவர் பதவியை பெற்றது. இதனால் பா.ஜ.க.வும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக, பணம் இல்லை என்ற காரணத்தை கூறி மதசார்ப்பற்ற ஜனதா தளம் அந்த தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.