×

ஊர் பெயரை மாற்றினால்தான் பிரச்சினை.. நாங்க பழத்தின் பெயரை மாத்துறோம்.. குஜராத் பா.ஜ.க. அரசு அதிரடி

குஜராத் அரசு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றியுள்ளது. நல்ல வேளையாக இதற்கு எந்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மகாராஷ்டிராவில் அவுரங்கபாத் நகரின் பெயரை சம்பாஜிநகர் என மறுபெயரிட வேண்டும் என்று சிவ சேனா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் குஜராத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு சத்தம் இல்லாமல் ஒரு பழத்தின் பெயரை கமலம் என்று மறுபெயரிட்டுள்ளது. குஜராத் முதல்வர் விஜய்
 

குஜராத் அரசு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றியுள்ளது. நல்ல வேளையாக இதற்கு எந்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மகாராஷ்டிராவில் அவுரங்கபாத் நகரின் பெயரை சம்பாஜிநகர் என மறுபெயரிட வேண்டும் என்று சிவ சேனா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் குஜராத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு சத்தம் இல்லாமல் ஒரு பழத்தின் பெயரை கமலம் என்று மறுபெயரிட்டுள்ளது.

டிராகன் என்ற கமலம் பழம்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இது தொடர்பாக கூறியதாவது: டிராகன் பழத்தின் பெயரை கமலம் என மறுபெயரிட அரசு முடிவு செய்துள்ளது. டிராகன் என்ற வார்தையின் பயன்பாடு ஒரு பழத்திற்கு ஏற்றதல்ல என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிராகன் பழம் தாமரை மலர் போல இருப்பதால், அதற்கு சமஸ்கிருத வார்த்தையான கமலம் என்று பெயர் மாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விஜய் ரூபானி

குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளாக டிராகன் பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கமலம் என்றால் தாமரை. பா.ஜ.க.வின் சின்னம் தாமரை. குஜராத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் பெயர் கமலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் பழத்தின் பெயரை கமலம் என்ற மாற்றியதற்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக நீங்க நினைக்காதீங்க.