அமித்ஷா கையில் முக்கிய ஆவணத்தை கொடுத்த ஆளுநர்! விஜய் ஆட்சிக்கு ஆபத்து?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சந்தித்து முக்கியமான ஆவணம் ஒன்று கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் தமிழக ஆளுநர் டெல்லி சென்றிருந்தார். அப்பொழுது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வெறும் 10 நிமிடம் தான் சந்தித்து பேசிவிட்டு வந்தார். தற்பொழுது டெல்லி சென்றிருக்கும் ஆளுநர் அவர்கள் சரியாக மத்திய உள்துறை அமைச்சரை ஒன்றரை மணி நேரம் சந்தித்து பேசி இருக்கிறார். தமிழகத்தின் முழுமையான அரசியல் நிகழ்வுகள் . தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக பல விஷயங்கள் நடந்ததை பற்றி பேசி இருக்கிறார்கள்.
ஏனென்றால் சமீப காலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சிறையில் இருந்து கைதிகள் தப்பித்து சென்று விடுகிறார்கள். தொடர்ச்சியான கொலை,கொள்ளை, போன்றவை நடைபெற்று வருகின்றன அது குறித்து விவரமாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வர இருக்கிறது. அது குறித்தும் விவரமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்கழக பதவியேற்று ஆறு மாதங்கள் முடிந்து விட்ட நிலையில். அவர்களது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது, அரசாங்கம் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றது என அதையும் ஆளுநர் விளக்கமாக கூறியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கின்றது. அது குறித்து பல கட்சிகள் ஆளுனரிடம் புகார் அளித்த நிலையில் அது குறித்தும் விவரமாக மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசி இருக்கிறார் ஆளுநர்.