×

8 நிறுவனங்கள்… ரூ.10,399 கோடி முதலீடு… 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு!- தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் விக்ரம்சோலார் என்ற நிறுவனம் 5,423 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி 7,542 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. இதேபோல், சிங்கப்பெருமாள்கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில் யோடா என்ற நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம் தொடங்கி 2,500
 

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் விக்ரம்சோலார் என்ற நிறுவனம் 5,423 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி 7,542 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. இதேபோல், சிங்கப்பெருமாள்கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில் யோடா என்ற நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம் தொடங்கி 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. கோவையில் ELGI நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி, 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் CGD sathrai நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி 1500 பேருக்கும், ராணிப்பேட்டை NDR தொழில் பூங்காவில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கும், கோவையில் Aqua குரூப் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கி 400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் GI Agro tech நிறுவனம் 36 கோடி ரூபாய் முதலீட்டில் முந்திரித் தொழிற்சாலை தொடங்கி 465 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. அதே நேரத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் JS Auto cast நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கப்பட உள்ளது. இதனை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.