பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம்! மதுவந்தி, நமீதாவுக்கு செயற்குழு உறுப்பினர் பதவி
தமிழக பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகைகள் கவுதமி, நமீதா, குட்டி பத்மினி மற்றும் மதுவந்திக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி, குட்டி பத்மினி, நமீதா மற்றும் மதுவந்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.