×

மத்திய பிரதேசத்தில் 20ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.. எதிர்கட்சி தலைவராக கமல் நாத் தேர்வு..

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. வரும் 20ம் தேதியன்று மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடருடன் பட்ஜெட் கூட்டத்தொடரும் தொடங்குகிறது. கடந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், அண்மையில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் ஆட்சியை இழந்தது. தற்போது எதிர்கட்சியாக அவையில் அமர உள்ளது. காங்கிரசின் எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் கமல் நாத்தை அந்த கட்சி தேர்வு செய்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேச
 

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. வரும் 20ம் தேதியன்று மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடருடன் பட்ஜெட் கூட்டத்தொடரும் தொடங்குகிறது. கடந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், அண்மையில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் ஆட்சியை இழந்தது. தற்போது எதிர்கட்சியாக அவையில் அமர உள்ளது.

காங்கிரசின் எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் கமல் நாத்தை அந்த கட்சி தேர்வு செய்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் அமைப்பின் துணை தலைவர் சந்திர பிரபாஷ் நாத் கூறுகையில், சட்டப்பேரவையில் காங்கிரசின் எதிர்கட்சி தலைவராக மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத்தை கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டு விரைவில் சட்டப்பேரவையின் செயலகத்துக்கு அனுப்பப்படும். எங்களது தலைமை கொறடா அந்த கடிதத்தை மாநில சட்டப்பேரவை செயலகத்தில் ஒப்படைப்பார் என தெரிவித்தார்.

மத்திய பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு 21ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மாநில நிதியமைச்சராக புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஜெகதீஷ் தியோரா மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.