×

ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக முன்மொழிந்த முன்னாள் அமைச்சர் மறைவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார். அவருக்கு வயது 91. உடல்நலக் குறைவு காரணமாக கிண்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மொத்தமாக நான்கு முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொண்டாமுத்தூரில் இரண்டு முறையும் கோவை தெற்கு தொகுதியில் இரண்டு முறையும் வெற்றிவாகை சூடினார். எம்ஜிஆர் காலத்திலேயே பலம் வாய்ந்த நபராகக் கட்சியில் வலம் வந்திருக்கிறார். அப்போதே கல்வியமைச்சராக இருந்திருக்கிறார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுடன் துணை நின்ற 29
 

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார். அவருக்கு வயது 91. உடல்நலக் குறைவு காரணமாக கிண்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மொத்தமாக நான்கு முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொண்டாமுத்தூரில் இரண்டு முறையும் கோவை தெற்கு தொகுதியில் இரண்டு முறையும் வெற்றிவாகை சூடினார். எம்ஜிஆர் காலத்திலேயே பலம் வாய்ந்த நபராகக் கட்சியில் வலம் வந்திருக்கிறார். அப்போதே கல்வியமைச்சராக இருந்திருக்கிறார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுடன் துணை நின்ற 29 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். ஜெயலலிதாவைக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்மொழிகிறேன் என்று முதன்முதலில் கூறியவர் அரங்கநாயகம் தான். இதனால் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்கள் பட்டியலில் அரங்கநாயகத்திற்கு எப்போதும் இடமுண்டு. அவரின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார் அரங்கநாயகம்.

1991-96ஆம் ஆண்டுகளில் கல்வியமைச்சராகப் பதவி வகித்தவர் அரங்கநாயகம். இவர் தனது மனைவி மற்றும் மகன் பெயரில் 1 கோடியோ 15 லட்ச ரூபாய் சொத்து வாங்கியதாக, அரங்கநாயகம், அவரது மனைவி மற்றும் மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில் அரங்கநாயகத்திற்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் அதிமுகவிலிருந்து விலகி 2006ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்தும் 2014ஆம் ஆண்டு விலகினார். அன்றிலிருந்து இறக்கும் வரை அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.