×

“சசிகலா வருகையை எதிர்நோக்கி, தமிழகமே ஆவலுடன் காத்திருப்பு” – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

தர்மபுரி சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி தமிழகமே ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தர்மபுரியில் நேற்று நடைபெற்ற அமமுக சட்டமன்ற தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2021 சட்டமன்ற தேர்தலின்போது, அமமுக சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், ஒரு தேர்தல் அறிக்கை வீதம் 234 தேர்தல் அறிக்கைகளை வெளியிட தயாராகி வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய பழனியப்பன், சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி அமமுக தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழகமே ஆவலுடன் காத்திருப்பதாகவும்,
 

தர்மபுரி

சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி தமிழகமே ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தர்மபுரியில் நேற்று நடைபெற்ற அமமுக சட்டமன்ற தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2021 சட்டமன்ற தேர்தலின்போது, அமமுக சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், ஒரு தேர்தல் அறிக்கை வீதம் 234 தேர்தல் அறிக்கைகளை வெளியிட தயாராகி வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய பழனியப்பன், சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி அமமுக தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழகமே ஆவலுடன் காத்திருப்பதாகவும், அவர் முன்னதாகவே விடுதலை ஆகவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அதிமுகவை மீட்கவே அமமுக என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருவதாக கூறிய பழனியப்பன், அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்கு ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.