×

நாளை பாஜகவில் இணைகிறார் திமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்

திமுக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் நாளை அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். முன்னாள் எம்பியான இவர், கடந்த ஏப்ரல் மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். கருணாநிதியை போல் கட்சியை வழிநடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றும் தன்னை முன்னிலைப்படுத்தக்கொள்ள நாடக அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் என்றும் கே.பி.ராமலிங்கம் குற்றஞ்சாட்டினார். மேலும் திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு
 

திமுக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் நாளை அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். முன்னாள் எம்பியான இவர், கடந்த ஏப்ரல் மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். கருணாநிதியை போல் கட்சியை வழிநடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றும் தன்னை முன்னிலைப்படுத்தக்கொள்ள நாடக அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் என்றும் கே.பி.ராமலிங்கம் குற்றஞ்சாட்டினார். மேலும் திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து கட்சித் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கே.பி. ராமலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கே.பி.ராமலிங்கம் நாளை அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இவர் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உரையாற்றினார். இதனால் அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.