×

எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் வீட்டு திருமணம்… முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வாழ்த்து!

பெருந்துறை தொகுதி தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ வீட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து,அவரின் மகன் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவுமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் – மாதேஸ்வரி ஆகியோரது மகன் திவாகர் சக்திவேல். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். இவருக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஆனந்த் மகள் சுவாதிகாவுக்கும் வருகிற 28-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சேலம் வந்த முதல்-அமைச்சர்
 

பெருந்துறை தொகுதி தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ வீட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து,அவரின் மகன் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்

முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவுமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் – மாதேஸ்வரி ஆகியோரது மகன் திவாகர் சக்திவேல். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.

இவருக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஆனந்த் மகள் சுவாதிகாவுக்கும் வருகிற 28-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சேலம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் பெருந்துறை தோப்புப்பாளையத்தில் உள்ள தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ வீட்டுக்கு சென்றார்.

முதல்-அமைச்சருக்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மணமக்கள் இருவரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்