அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழு அமைக்கும் இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக உயர்மட்டக் குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்விக்கு பிறகு மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்பதற்கு வந்த பிறகுதான் தோல்வி ஏற்பட்டு விடுவதாகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு கூட்டணி நேரத்தில் எடப்பாடி எடுத்த தன்னிச்சையான முடிவே காரணம் என்று மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதை அடுத்து அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசிக்கும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் பெயரில் விரைவில் உயர்மட்ட குழு அமைக்கப்படவிருக்கிறது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து குழு ஆலோசிக்கும். உயர்மட்டக் குழு அமைத்தால் அதிருப்தியாளர்கள் சமரசம் அடைவார்கள் என்று எடப்பாடி எண்ணுகிறார். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..