×

அம்மா பெயரில் பல்கலை. இருப்பதால் அதை மூட நினைக்கிறது திமுக அரசு – எடப்பாடி குற்றச்சாட்டு!

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை திமுக அரசு மூட நினைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்வதற்காகவும் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காகவும் அந்தக் கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு ஜெயலலிதா
 

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை திமுக அரசு மூட நினைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்வதற்காகவும் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காகவும் அந்தக் கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு ஜெயலலிதா பெயரில் இருக்கும் காரணத்தினால் அந்தக் கல்லூரி இயங்கக் கூடாது என்பதற்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுவதற்கு திமுக அரசு சொல்கின்ற காரணமும் சரியான காரணம் அல்ல. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிதி இல்லை என்று கூறுகிறார். அப்படி இல்லாத பட்சத்தில் மதுரையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் அவர்களுடைய பெயரில் நூலகம் அமைக்கப்படும் என சொல்லுகிறார்கள். அதற்கு 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். திமுக அரசு திட்டமிட்டு இதை செய்கிறது என்றும் கூறினார்.