×

ஊடகத் தொழிலாளர் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! – முதல்வருக்கு மதுரை எம்.பி கடிதம்

தமிழக ஊடகப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு, நலனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கோவிட் 19 பெரும் நெருக்கடியின் பின் புலத்தில் தமிழக காட்சி மற்றும் அச்சு ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். காட்சி/ அச்சு ஊடக ஊழியர்கள்
 

தமிழக ஊடகப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு, நலனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கோவிட் 19 பெரும் நெருக்கடியின் பின் புலத்தில் தமிழக காட்சி மற்றும் அச்சு ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். காட்சி/ அச்சு ஊடக ஊழியர்கள் கோவிட் 19 நெருக்கடிக்கு மத்தியிலும் ஆற்றி வரும் அரும் பணி தாங்கள் அறிந்ததே. மக்கள் மத்தியில் கோவிட் 19 குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதிலும், அரசின் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதிலும் பெரும் பங்களிப்பை நல்கி வருபவர்கள் இவர்கள்.
allowfullscreen
ஆனால் ஊடக நிர்வாகங்கள் பணி நீக்கங்கள், சம்பள வெட்டு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுளார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகும். அரசிடம் தொழில் நலன் காக்க ஆதரவு நாடும் இந்த நிறுவனங்கள், தத்தம் தொழிலாளர்களிடம் காண்பிக்கிற அணுகுமுறை ஏற்புடையதல்ல. ஊடக தொழிலாளர் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என கருதுகிறேன். உடனடியாக தாங்கள் தலையிட்டு தமிழக ஊடகங்களில் நிகழும் பணி நீக்கங்கள், சம்பள வெட்டு ஆகியவற்றை தடுத்து நிறுத்தி ஊடக ஊழியர் நலன் காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தங்கள் உடனடி நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.